தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் தமிழக கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 20ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகித்தில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துக்கு நியாயம் கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டதுடன், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரது இறுதி கிரிகை ஒருவாரத்துக்குப் பின்னர் நேற்று நடைபெற்றது….

Read More

உணவில் உப்பு சேர்த்தல் தொடர்பில் ஓர் அதிர்ச்சி செய்தி!! ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த அளவு போதாது. உணவில் இன்னும் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில்…

Read More

மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் விவாதம்

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று காலை 10.30 மணிக்கு இது குறித்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எதிர்காலம் தொடர்பில் இப்படி ஒரு முடிவெடுத்து விட்டாரே அமலா பால்!!

(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் சென்னையில் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் நடிகை அமலா பாலின் திட்டமாம். இயக்குனர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்த பிறகு அமலா பால் படங்களில் படுபிசியாகிவிட்டார். கன்னடத்தில் அவர் நடித்த ஹெப்புலி படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் அவர். மலையாளம், தமிழிலும் அம்மணி பிசியாக ஓடியோடி நடிக்கிறார். மேலும் பாடலும் பாடுகிறார். விஜய்யை பிரிந்துவிட்டாலும் பேட்டி கொடுக்கும்போது எல்லாம் தனக்கு இன்னும் பிடித்த நபர் விஜய் தான் என்று கூறி…

Read More

விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் தொடர்பில் ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக உடலை புத்தாக்கம் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் விரதத்தின் ஊடாக குருதியின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரியவந்துள்ளது. விலங்குகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகி இருக்கிறது. விரதம் அனுஷ்டிக்கும் போது, பல்வேறு காரணங்களால் உடலில் செயலிழந்த கலங்களும், உறுப்புகளும் மீண்டும் உருவாக ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதாந்தம் 5 நாட்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் விரதம் பிடிக்க விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது….

Read More