ஒருநாள் அணியின் புதிய தலைவராக திஸர பெரேரா
(UTV| COLOMBO)-ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் இலங்கை அணித் தலைவராக திஸர பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோபூர்வ அறிவிப்பை இன்று மாலை சிறிலங்கா கிரிக்கட் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் அணித்தலைவராக இதுவரை உப்புல் தரங்க செயற்பட்டிருந்தார். இதேவேளை, அணித்தலைமைக்கு முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், லஹிரு திரிமன்னவுடன், நிரோஸன் திக்வெல்லவின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் சுற்று போட்டியின் போது இருபதுக்கு 20 தொடரில் திஸர…