இலங்கை அணியின் படுதோல்விக்கு பின்னர் சங்கா கூறிய கருத்து

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற அடிப்படையில் சிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளது.

இது சிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி பெற்று கொண்ட முதல் தொடர் தோல்வியாகும்.

இதேவேளை இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில் அனைத்து கிரிக்கட் ரசிகர்களும் இது தொடர்பில் அதிகளவில் உரையாடிவருகின்றனர்.

இதனிடையே இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் குமார் சங்ககார, இலங்கை அணியின் தோல்வி தொடர்பில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Quo Vadis Sri Lanka cricket?’  இதன் அர்த்தமானது, “இலங்கை கிரிக்கட் எந்த திசை நோக்கி பயணிக்கின்றது”.

‘Quo Vadis’ இதன் அர்த்தமானது, “நீங்கள் எங்கே போகின்றீர்கள்”.

இதேவேளை, குறித்த டிவிட்டரின் ஊடாக மேலும் கருத்து தெரிவித்துள்ள சங்ககார, தோல்விக்கு பின்னர் கிரிக்கட் நிர்வாகம், வீரர்கள், ரசிகர்களுடன் அணியின் அதிகாரிகளது உணர்வுகள் எப்படி இருக்கும் என தெரியும் என்று.

மேலும் அதில், இலங்கை அணிக்கு தற்போது உதவி தேவையென்றும், அரசியல் போன்ற தேவையற்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் சங்ககார தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *