குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து கொலை

(UTV|COLOMBO)-வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை பணத்தை செலுத்தாததால் குறித்த மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து குறித்த அதிகாரியை இருவர் தாக்கியுள்ளனர். அச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அதிகாரியை லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்….

Read More