தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

(UDHAYAM, COLOMBO) – தரம் 1இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம் என்று கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்களை தபாலில் சேர்ப்பதற்குரிய காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது. தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சில பெற்றோர் சிக்கல்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பெற்றோர் தாம் விண்ணப்பிக்கும் பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்…

Read More