பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி

UTV | COLOMBO – அஞ்சல் பணியாளர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் செலுத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த காரியாலயங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் 4 ஆம் திகதிக்கு பின் வரும் முதல் வாரத்தின் சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். தேர்தலை ஒரே தடவையில் நாடு முழுவதிலும் நடத்தப்பட வேண்டும். இதனை தனித்தனியா நடத்துவதற்கான எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. எனவே, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வினவியபோது, எதிர்வரும் ஜனவரி மாதம்…

Read More

‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வௌியேறிய ஆர்த்தியின் அதிரடி ட்விட்!!!

(UDHAYAM, COLOMBO) – நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். மற்றவர்களை போலி போலி என்று கூறிக்கொண்டிருந்த ஆர்த்தி, உண்மையில் ஓவர் ஆக்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களும், மிமிக்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆர்த்தி தற்போது முதன்முதலாக டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ‘நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னை கேலி செய்வதில் இதுவரை பிசியாக இருந்தவர்கள் இனி…

Read More

பிரபல கிரிக்கட் வீரரின் அதிரடி துடுப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – பிரபல கிரிக்கட் வீரர் குமார சங்ககாரவின்  துடுப்பாட்டம் பலரினாலும் பேசப்பட்டு வருகின்றது. அவர் கடந்த தினங்களில் இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கட் போட்டியின் போது துடுப்பெடுத்தாடிய துடுப்பாட்டமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. சங்ககார கடந்த போட்டிகளில் சரே பிராந்திய அணியை பிரதிநிதித்துப்படுத்தி விளையாடிய போது அதிக சதங்களை குவித்தார். இந்நிலையில் கடந்த போட்டி ஒன்றின் போது அவரினால் பெறப்பட்ட 6 ஓட்டம் ஒன்றின் போது பார்வையாளர் ஒருவரின் கைபேசியை பந்து  தாக்கியதில் கைபேசியின் முன்…

Read More

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 சாரதிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பதுளை நகர எல்லையினுள் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. இதன்போது நகரில் சந்தேகத்துகிடமான முறையில் நடமாடிய 8 பேர், காவற்துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

அனைத்து தரவுகளும் என்னிடம் உள்ளது – தயாசிறி அதிரடி கருத்து

(UDHAYAM, COLOMBO) – இந்த நாட்டு விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி தொடர்பான அனைத்து தரவுகளும் தன்னிடம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிய ஜயசேகர தெரிவித்துள்ளார். வெயங்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேவையொன்றால் அதனை வெளிப்படுத்தவும் தான் தயார் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிய ஜயசேகரவின் உரை “உண்மை பேசுவது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளது. உண்மையை சொன்னால் மறுநாள் பேஸ்புக்கில் இல்லாமல் செய்து விடுகின்றனர்….

Read More

இனி இப்படி யாரும் பேசமாட்டார்கள் – பாகிஸ்தான் அணி தலைவர் அதிரடி கருத்து

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல்முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி குறித்து, பாகிஸ்தான் தலைவர், சர்பராஸ் அகமது கூறும்போது, ‘இந்த வெற்றி இன்று, நாளை மட்டுமல்ல, பல காலம் நினைக்கப்படும். இனி, உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என யாரும் பேசமாட்டார்கள். இந்தப் போட்டிக்கு நாங்கள் வரும்போது 8-வது இடத்தில் இருந்தோம்….

Read More

ஐ.சி.சியின் புதிய அதிரடி விதிமுறைகள் விரைவில்

(UDHAYAM, COLOMBO) – ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு சர்வதேச கிரிக்கட் சபை கொண்டுவந்துள்ளது. சர்ச்சைக்குரிய முறையில் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வந்ததும், தடிமனான துடுப்பாட்ட மட்டை உபயோகிப்பதால் பந்து சேதமடைகிறது எனவும் வெகு நாட்களாகவே பரவலாக பேசப்பட்டும் முறைப்பாடு செய்யப்பட்டும் வந்தது. எனவே இது தொடர்பில் பல கோரிக்கைகளும் சர்வதேச கிரிக்கட் சபையிடம் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில அதில் மூன்று முக்கிய கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கட் சபை நிறைவேற்ற…

Read More

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு:ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

(UDHAYAM, COLOMBO) – இந்த ஆண்டில் அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சட்டம் ஒழுங்குகள் அமைச்சருக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More