அனர்த்தப் பிரதேசங்களில் முப்படை மற்றும் நிவாரண குழுவினர்
(UDHAYAM, COLOMBO) – அனைத்து அனர்த்தப் பிரதேசங்களையும் நிவாரண குழுவினர் நெருங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சீரற்ற காலநிலையினால் நேற்று வரை நெருங்குவதற்கு கடினமாக இருந்த அனர்த்தங்களுக்கு உள்ளான இடங்களுக்கு இன்று முப்படையினர் மற்றும் நிவாரண குழுக்கள் நெருங்கியுள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு 15 இராணுவ படையணிகளைச் சேர்ந்த 1500 அதிகாரிகள், பயிற்றப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 86 நிவாரணக் குழுக்களில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள், 86…