அமெரிக்காவின் கலிபோர்னியா 2 வாரமாக தீயில் எரிகிறது, தீயணைப்பு முயற்சிகள் தோல்வி
(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பதால் மான்ட்டிகோ, சாண்டா பார்ப்பாரா, வென்சுராகவுன்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள லட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீக்கு “தோமஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகொப்டர்களும், 8,500 தீயணைப்பு…