அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்
(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் இன்று முதல் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றன. இவ்வாறு மூன்றாம் தவணை விடுமுறைக்கான மூடப்படும் பாடசாலைகள் 2018ம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 2ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. ஜி.சி.ஈ சாதாரண…