அரசாங்கம் இதற்காக இனவாதத்தை தூண்டுகிறது – மஹிந்த ராஜபக்ஸ
(UDHAYAM, COLOMBO) – பொதுக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை மறைக்கும் பொருட்டு, அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் நேற்று திருகோணமலையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் வைத்தே மஹிந்த இதனைக் குறிப்பிட்டார்.