ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச மற்றம் தனியார் நிறுவனங்களில் ஏற்கெனவே அறிவித்ததைப் போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக சாலையின் களனி பாலத்திற்கு அருகில் களனி மற்றும் வத்தளை பகுதிகளில் வாகனங்கள் வௌியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதியை இம்மாதம் 10ம் திகதி தொடக்கம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக இந்த வீதி மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக மாற்றுவீதிகளை அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி , கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து களனி மற்றும் பெஹலியகொடை நோக்கி பயணிப்பதற்காக பெஹலியகொடை வௌியேறும்…

Read More

மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த மூன்று மாகாணங்களுக்கான பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அரசியல் அமைப்பு சரத்துக்களின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள்…

Read More

கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி விஷேட அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் ரியாலை ஏற்கவேண்டாம் என எந்தவொரு வங்கிக்கும் அறிவிக்கவில்லை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியால் பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்டளவு பணமே இவ்வாறு பரிமாற்ற வாய்ப்பாளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம், மழை காரணமாக காலி, மாத்தறை, ரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில, பாதுக்க பிரதேசம் நீரில் மூழ்கி இருக்கிறது….

Read More

குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – சகல உள்ளுராட்சி நிறுவனங்களினதும் கழிவகற்றல் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றக்கோரும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல்  நேற்று  நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17வது ஷரத்திற்கு அமைய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தாலும் முன்னெடுக்கப்படுகின்ற அல்லது பேணப்படுகின்ற கழிவகற்றல் ,சேகரித்தல், வாகனங்களில் கொண்டு செல்லல், தற்காலிகமாக சேர்த்து வைத்தல், பதப்படுத்தல் பிரித்தல்,…

Read More

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகமானோர் பரீட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் மற்றும் பரீட்சையை முழுமையாக நிறைவு செய்யாத 4 மாணவர்கள் உட்பட…

Read More