சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவர்கள் நேற்றிரிவு கொழும்பை வந்தடைந்தனர். இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தலைமையிலான குழுவினர்; வரவேற்றனர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி குழுவினர் கவனம் செலுத்துவர்.

Read More

ஐ.நா.சபையின் இளைஞர் அலுவல்கள் இலங்கைத் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் என்டோனியோ குற்றேரஸ் தனது இளைஞர் அலுவல்கள் தூதுவராக நியமித்துள்ள இலங்கையைச் சேர்ந்த திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் நற்பெயரை உலகம் முழுவதும் அறியச்செய்து திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க தாய்நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த கௌரவத்தினை ஜனாதிபதி பாராட்டினார். அவருக்கு தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததுடன், இலங்கையின் இளைய தலைமுறையினருக்காகவும் உலகவாழ் இளைய தலைமுறையினருக்காகவும் அவர்…

Read More