இலங்கை மின்சார சபை ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையின் ஊழியர் குழுவொன்று ஆரம்பித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எட்டியதாக மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]    

Read More

கீதாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்தது

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்வரும் 15ம் திகதி வரை இடைநிறுத்தம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமார சிங்க தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் , அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது….

Read More

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகமானோர் பரீட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் மற்றும் பரீட்சையை முழுமையாக நிறைவு செய்யாத 4 மாணவர்கள் உட்பட…

Read More