மாணவர்களுக்கு இதுவரை 70 லட்சம் ரூபா சுரக்ஷா காப்புறுதி

(UTV|COLOMBO)-சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி தொகையாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இதுவரை 70 லட்சம் ரூபாவை மாணவர்களுக்கு வழங்கியிருப்பதாக கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதகாலப் பகுதிக்குள் இந்தக் காப்புறுதிக் கொடுப்பனவிற்காக இரண்டாயிரத்து 243 விண்ணப்பங்கள் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்குக் கிடைக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சு கடந்த மாதம் 7ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்த விளக்கமளிப்பு நிகழ்ச்சித் திட்டம் காரணமாக இந்தக் காப்புறுதியின் பயனை பெற்றுக்கொள்வதற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. [alert color=”faebcc”…

Read More