இந்தியாவின் தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பு
(UTV|INDIA)-மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில், இந்தியாவின் தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சீனாவின் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு விடயத்தில் இந்திய இராணுவ தலையீட்டை மாலைத்தீவின் எதிர்கட்சித் தலைவர் கோரி இருந்தார். ஆனால் இது மாலைத்தீவின் இறைமைக்கு விரோதமானது என்று சீனா அறிவித்துள்ளது. இந்தநிலையில் மாலைத்தீவின் இறைமையை மதித்து, அந்த நாட்டின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியான தீர்வை காண சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது….