இந்தியாவில் அனுமதியின்றி 64 சதவீதம் நோய் எதிர்ப்பு மாத்திரை விற்பனை

(UTV|INDIA)-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணிமேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸ்டில் பல்கலைக்கழக நிபுணர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோடிக்கணக்கான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் விசே‌ஷம் என்னவென்றால் இவை மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாதவையாகும். இந்த மாத்திரைகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மல்டி நே‌ஷனல் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டவை. இங்கு அவற்றை விற்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 118 விதமான நோய்…

Read More

இந்தியாவில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடன்களில் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகளால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அங்கு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

இந்தியாவில் கோர விபத்து:ஸ்தலத்திலேயே 17 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் பலியாகினர். புது டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோன்டா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரவூர்தியொன்றுடன் மோதியுள்ளது. இந்த விபத்து நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றவுடனேயே பேருந்தும், பாரவூர்தியும் தீப்பற்றியுள்ளது. இதனால் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர படுகாயமடைந்த 20க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,…

Read More

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது

(UDHAYAM, COLOMBO) – பயண ஆவனங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். த டைம்ஸ் ஒப் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவின் குல்லு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது அவருடன் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணொருவரும், கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெண்ணிடமிருந்த ஒருவகை போதைப்பொருளை காவற்துறையினர் மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

அங்கொட லொக்கா உட்பட இருவர் இந்தியாவில் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்கா மற்றும் மேலுமொரு நபர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையை வைத்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தாக்குதல் முறியடிப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய இராணுவத்தின் கணணிகளை இலக்கு வைத்து முயற்சிக்கப்பட்ட இணையத்தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவலாளர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிரசித்த இராணுவக்கல்லூரியில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறி, இந்திய அரசாங்கத்தில் இருந்து அனுப்பப்படுவதை போன்று மின்னஞ்சல், குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.எம்.டி 16  என்ற புனைப்பெயரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலை அடுத்து அவை கிடைக்கப்பெற்ற சில இராணுவ அதிகாரிகள், இந்தியாவின்…

Read More

கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – மலையக பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் அழைத்து வரப்படவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானியர் ஆலயத்தின் ஊடாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க  அமைச்சர் கூறினார். அவர் பெருந்தோட்டப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டார். இந்தக் கலந்துரையாடல் நேற்று கல்வி அமைச்சின் மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்றது. இதில் புள்ளி விபரங்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் மலையகத்தில்…

Read More