கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு
(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான இற்தப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறுகின்றன. இந்தமுறை சாதாரணதர பரீட்சைக்காக ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர். இதேவேளை, கொழும்பு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் இருவர், கணித பாட பரீட்சைக்கு கைத்தொலைபேசியை பயன்படுத்தி, பரீட்சையை எழுதிய சம்பவம் பதிவாகியுள்ளது. …