தொடரூந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்
(UTV|COLOMBO)-தொடரூந்து இயந்திர சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்வு கிடைக்காவிடின் இந்த போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…