ஜனாதிபதி, கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்புக்கு அமைய இந்த கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது மத்திய வங்கியின் பிணை முறி விநியோக அறிக்கை தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன், பிணை முறி விநியோகம் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More