இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்

(UTV|JERMANY)-ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் உள்ள மீர்பஸ்க் என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் எதிர்பாராத விதமாக டிபி கார்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு ரெயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது….

Read More

மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு

(UDHAYAM, COLOMBO) – யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி வரணிப் பகுதியில் வேனிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மாணவி மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவி, பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். ஹயஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால் மாணவி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது….

Read More

கிளிநொச்சில் கனரக வாகனங்கள் இரண்டு விபத்து இருவர் வைத்தியசாலையில் போக்குவரத்து தடை – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள்  நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து  பரந்தன்  நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  லொறி இரக வாகனமும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டதனாலையே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிசார்  தெரிவிக்கின்றனர் …

Read More

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு:பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

(UDHAYAM, COLOMBO) – இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார். தமது பூர்வீக இடமான  இரணைதீவை  தம்மிடம் கையளிக்க வேண்டும் என கோரி அறுபதாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள  இரணைதீவு மக்களை போராட்ட இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன , இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

Read More

டிக்கோயா மணிக்கவத்தையில் மண்சரிவு இரண்டு வீடுகள் சேதம் ஏழுபேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா   வனராஜா கிராமசேவாகர் பிரிவிற்குட்பட்ட மனிக்கவத்தை தோட்டத்தில் 03.06.2017 அதிகாலை இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் ஏழுபேர் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர் லயன் குடியிருப்பின் பின்புரமுள்ள மண்மேடு சரிந்தே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது சிறுவர்கள் உட்பட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தற்காளிகமாக உறவினர்களின் வீடுகளின் தங்கியுள்ளனர் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காளிகமாக ஒர் இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ளபோது அது தங்குவதற்கு பெருத்தமான இடமில்லையென பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கொடூரம்

(UDHAYAM, COLOMBO) – வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவற்துறை தெரிவித்துள்ளனர். வவுனியா – சண்முகபுரம் கிராமத்தில் வசிக்கும் 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது வீட்டுக்கு முன்பகுதியில் நீர்ப்பம்பி திருத்தும் கடை ஒன்றுவைத்து நடாத்திவந்திருக்கின்றார். இதேவேளை, நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாகவும் பின், இரவு 9 மணியளவில் தனது…

Read More

வௌ்ளவத்தை கட்டிட சரிவு : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரம்!

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் இடம்பெற்ற கட்டிட இடுபாடுகளுக்களுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில், சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை சாலிமன் வீதியிலுள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று நேற்று சரிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்நதனர். அவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையிலும் ஏனையவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கியிருந்த இரண்டு பேர் நேற்று மாலை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, கட்டிட…

Read More

அக்குரஸ்ஸயில் பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 52 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – அக்குரஸ்ஸ – கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றும் மற்றும் தனியார் பேரூந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் பலத்த காயங்களுக்கு உள்ளான 6 பேர் மாத்தறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த விபத்தில் 31 பெண்களும் மற்றும்…

Read More

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இரண்டு பேர் களுபோவில மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுள், 12 வயது சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவரை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல தமக்கு உதவி செய்யுமாறு குறித்த சிறுமியின் தந்தை அதிகாரிகளிடம்…

Read More

திடீரென பாதையில் ஓடிய குழந்தைக்கு மேலாக இரண்டு கெப் வண்டிகள் சென்ற பயங்கர சம்பவம் – காணொளி

(UDHAYAM, COLOMBO) – சிறிய குழந்தைகளுடன் பாதையில் பயணிக்கும் பெரியோர்களின் கவனக் குறைவால் ஏற்பட்டுள்ள விபத்துக்கள் தொடர்பான பல செய்திகள் வெளிவந்துள்ளன. இதே போன்று இடம்பெறவிருந்த கோர, விபத்து சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சீனாவிலேயே இடம்பெற்றுள்ளது. இரண்டு வயதான குழந்தையொன்று பாதை ஊடாக திடீரென ஓடியுள்ள நிலையில், பாதையில் பயணித்த 2 கெப் வண்டிகள் அந்த குழந்தைக்கு மேலாக சென்றுள்ளன. எனினும் அதிர்ஷ்டவசமாக குழந்தை அசைவில்லாமல் இருந்ததன் காரணமாக குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை….

Read More