இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்..!

(UTV|COLOMBO)-ரத்மலான கடற் பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 பேர் இவ்வாறு நீராடிக் கொண்டிருந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன்போது 16 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]…

Read More

வானிலை எதிர்வுகூறலுக்கு நவீன இரு ராடர்கள்

(UDHAYAM, COLOMBO) – வானிலை எதிர்வுகூரலை செயற்றிறன் வாய்ந்ததாக மாற்றுவதற்கு நவீன வகையை சேர்ந்த இரு ராடர்கள் பொருத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை தெரிவித்தார். 2007ம் ஆண்டு 20 கோடி ரூபா செலவில் அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட டொப்லர் ராடர் கருவிகள் ஏன் இன்னமும் பொருத்தப்படவில்லை என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பரவலாக பேசப்படும் டொப்லர் ராடர் கருவிகளை விட சிறப்பான…

Read More

இரு முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட இலங்கை வீரர்களால் மாறிய போட்டி:கலங்கிய மாலிங்க

(UDHAYAM, COLOMBO) – செம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணியைத் தீர்மானிக்கும், போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி மற்றும் ஜூனைட்…

Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் பலி

(UDHAYAM, COLOMBO) – பெந்தொட்ட பிரதேசத்தில் இன்று அதிகாலை(29) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து காலி திசை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும், எதிர் திசையில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயங்களுக்கு உள்ளான மோட்டார் வாகனத்தின் பின்புற இருக்கையில் பயணித்த இரண்டு பெண்கள், பெந்தொட்ட மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார்…

Read More