இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!
(UTV|COLOMBO)-40 சதவீதத்திற்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் துறையில் மிக ஆர்வமாக ஈடுபடுகின்றன. இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையானது, ஆடை தொழில்துறையை விட விசாலமானது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பு, கிங்ஸ்பேரி ஹோட்டலில் இடம்பெற்ற உணவுப் பொதியிடல் மற்றும் உற்பத்திக் கண்காட்சியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் இந்திய மற்றும் சீனாவிற்கான தொழில்துறை…