வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாற்றம் அடைகிறது

(UTV|கொழும்பு) – சுமார் 200 வருட காலமாக பாவனையில் இருந்த புகையிரத பற்றுச்சீட்டுக்கு பதிலாக புதிய முறையிலான பற்றுச்சீட்டினை அறிமுகப்படுத்தவும், புகையிரதத்தில் ஆசன ஒதுக்கீட்டில் இடம்பெறும் இலஞ்ச ஊழல்களை கட்டுப்படுத்தவும் Online முறையில் ஆசன ஒதுக்கீடு முறை ஒன்றினை அறிமுகப்படுத்தவும் பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அனுமதியினைக் கோரி அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *