சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் தூக்கில் தொங்கினார்
(UTV|VAVUNIYA)-வவுனியா – வேப்பம்குளம் பிரதேசத்தில் நபரொருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சவுதி அரேபியாவில் சில காலம் பணிபுரிந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பிய எம்.மயூரன் என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. தூக்கில் தொங்கிய நிலையில் அவரை கண்ட உறவினர்கள் கூச்சலிட்டுள்ளனர். பின்னர் அங்குவந்த பிரதேசவாசிகள் அவரை வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், வவுனியா காவல்துறை…