222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை
(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ரொஷேன் சில்வா 56 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். சிட்டகொங் நகரில் நடைபெற்ற பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது….