இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு
(UTV|ISRAEL)-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு மீது லஞ்ச ஊழல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலிய காவல்துறையினரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இரு வேறு வழக்குகளில் லஞ்சம் மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக அவர் நடந்து கொண்டுள்ளதை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதாக இஸ்ரேல் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அடிப்படையற்றது என்றும், தாம் தொடர்ந்தும் பிரதமராக பணியாற்ற போவதாகவும் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பத்திரிக்கையான ‘எடியாட் அக்கோரனாட்’ என்ற…