விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர்; தேசிய டிப்ளோமா கற்கை நெறி

(UDHAYAM, COLOMBO) – விவசாய கல்லூரிகளின் 2018 – 2020 ஆம் ஆண்டுக்காக விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்தக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வவுனியா, அங்குணுகொலபெலச கரப்பிஞ்ச குண்டசாலை, பெல்வெஹர ஆகிய விவசாய கல்லூரிகளுக்க அனுமதிகோரி 2017 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Read More

வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேசல ஜயரத்னவிற்கு எதிராக அந்த சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் அந்த மாகாண சபையின் ஆளுநரிடம் வழங்கிய சத்தியகடதாசி நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ள வட கொரியா

(UDHAYAM, COLOMBO) – வட கொரியா புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணை இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் உந்துகணை பிரயோக நடவடிக்கைகளுக்காக அளப்பரிய பங்களிப்பினை இதன் மூலம் பெற முடியும் என வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் யுன் குறிப்பிட்டுள்ளார். இந்த பரீட்சை நடவடிக்கைகளை அவர் நேரடியாக விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார். இதன் மூலம் வட கொரியா செய்மதியினை அண்டவெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச தரத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்…

Read More