சுதந்திர ஆணைக்குழுவின் மூலம் உயர்தரத்திலான ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான
(UDHAYAM, COLOMBO) – சுதந்திர ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கையில் உயர்தரமான ஊடக செயற்பாடுகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். ஜகத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக சுதந்திரம் தொடர்பான மாநாட்டில் பிரதியமைச்சர் உரையாற்றினார். அரசாங்கம் ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. அத்தோடு ஊடகவியலாளர்களுக்கெதிரான பாதகமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத்தன்மை தொடர்பான குழுநிலை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்…