ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை
(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்ததாக, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்து, இன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், இரகசியமாக உள்நுழைந்தமை மற்றம் அலைபேசியை கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு, 30 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்த தீர்ப்பை இன்று வழங்கினார். தொம்பே பிரதேசத்தில் வசிக்கும் துருலாந்து அன்டனி ரம்சன் ஜோர்ஜ் என்ற சந்தேக…