த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

(UDHAYAM, COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்படுகிறது. ஆனால் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து தம்மை பலப்படுத்தி வருகிறதே தவிர, மக்கள் நலன் குறித்து அக்கறைக் கொள்ளவில்லை. சர்வதேசமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக…

Read More

இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உனா மெக்கோலி

(UDHAYAM, COLOMBO) – இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மெக்கோலி வலியுறுத்தியுறுத்தலை விடுத்துள்ளார். இனரீதியான வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர், கடந்த வாரத்தில் விசாகப்பூரணையை கொண்டாடியவர்கள் இந்த வாரம் புத்தரின் போதனைகளை மறந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More