வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ; விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்
(UDHAYAM, COLOMBO) – வடமாகாண கௌரவ அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைபற்றிய விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்.. வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அமர்வுகளில் என்மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோது நான் அவை ஆதாரம் இல்லாத,அபாண்டமான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும், நான்கு கோடி அல்ல,நானூறுரூபா தன்னும் நான் நிதிஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதை நிரூபியுங்கள் என்றும் தெரிவித்திருந்தேன். குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு இப்போதும் அதுவாகவே இருக்கிறது. மக்கள் என்மீது…