எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்

(UTV|INDIA)-இந்தியா – இலங்கை அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தொடக்க டெஸ்டில் முதலாவது இன்னிங்சில் 7-வது வரிசையில் இறங்கி 29 ரன்னும், 2-வது இன்னிங்சில் 8-வது வரிசையில் களம் கண்டு 5…

Read More

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை – பாதுகாப்பு செயலாளர்

(UDHAYAM, COLOMBO) – புதிய பாதுகாப்புச் செயலாளராக திரு.கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டதையடுத்து முதற்தடைவையாக கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பிரதம விகாராதிபதிகளின் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். இதன்போது , ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு செயலாளர் பதிலளிக்கும் போது, பாதுகாப்பு படையினர் கொடிய டெங்கு நோயிலிருந்து தேசத்தை பாதுகாப்பதற்காகவும், அதனை முற்றாக ஒழிக்கும் செயற்பாடுகளிலும், பொதுமக்களுக்கு அது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதிலும், மருத்துவ…

Read More

எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும் என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் -அமைச்சர் மனோகணேசன்

(UDHAYAM, COLOMBO) – காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இந்த…

Read More

தமக்கு எதிராக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை – ட்ரம்ப்

(UDHAYAM, COLOMBO) – தமக்கு எதிராக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்று அமெரிக்கவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் அவருக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருப்பதாகவும், ரஷ்யாவின் உதவியுடனேயே அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியதன் காரணமாகவே எப்.பி.ஐயின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமே பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தமக்கு எதிராக அவ்வாறான எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். எவ்வாறாயினும், ட்ரம்ப் – ரஷ்ய…

Read More

இலங்கையர்களுக்கான கனடா வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

(UDHAYAM, COLOMBO)  – இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று, கனடாவின் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான கனடாவின் வீசா நடைமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். இலங்கையர்கள் யாராகினும் கனடாவுக்கு பயணிக்க வீசா பெறுவது கட்டாயமாகும் என்று கனேடிய தூதரகம் அறிவித்துள்ளது.

Read More