அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன் போது ஆரயப்படவுள்ளதாக, அரசாங்க தரப்பின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அதுபோல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன…

Read More

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் நட்புறவின் அடிப்படையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் இந்த வர்த்தக சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தக சந்தையில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். கடந்த காலங்களில் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சந்தை வெற்றி அளித்ததை தொடர்ந்தே மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான…

Read More

பெந்தர கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை

(UDHAYAM, COLOMBO) – பெந்தர கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தெரிவிக்கப்படுகிறது. கடற்கடையின் கடமைநேர ஊடக பேச்சாளர் கொமாண்டர் ருவான் பிரேமவீர இதனை தெரிவித்துள்ளார். சிங்கபூருக்கு சொத்தமான கப்பல் ஒன்று அதன் அனைத்து மின்விளக்குகளையும் ஒளிரச் செய்ததனால் இவ்வாறான ஒரு காட்சி தென்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதும் குறித்த கப்பல் பயணித்த கடற்பகுதிக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் கடமைநேர ஊடக பேச்சாளர் கொமாண்டர் ருவான் பிரேமவீர குறிப்பிட்டார்.

Read More

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க கடற்படை கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. நேற்று ஹம்பாந்தோட்டை வந்துள்ள குறித்த கப்பல், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அங்கு தரித்து நிற்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பசுபிக் கடற்படை மற்றும் இலங்கை கடற்படை இலங்கையில் பசுபிக் கூட்டுறவு நிறுவனத்தின் நல்லெண்ண நோக்கினை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில், காலி,…

Read More