சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

(UTV | கொழும்பு) – கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சீன நாட்டு பெண் ஒருவரின் பணம் கொள்ளை ; 2 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை பிரதேசத்தில் சீன நாட்டு பெண் ஒருவரின் ஒரு கோடி 54 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் நேற்றைய தினம் கோட்டை பிரதேசத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணிக்க முற்பட்டுள்ள நிலையில் சில நபர்களினால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கம்பஹா காவற்துறையில் உத்தியோகஸ்தராக பணி புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான…

Read More

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

(UDHAYAM, COLOMBO) – தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார். கடற்படையினர் எந்தவொரு தருணத்திலும் கடற்படை தளபதியின் அனுமதியின்றி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More