டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்குவை பரவலை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தாவர உண்ணி நுளப்புகளை முதல் முதலில் கிராம பகுதிக்கு வெளியிடப்பட்டமையானது, டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கப்படும் புகை போன்ற காரணங்களால் நகர் புறங்களில் அந்த தாவர உண்ணி நுளம்புகள் அழியும் அவதானத்தால் என மருத்துவ ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்புகள் ஊடாக எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிலையத்தின் இயக்குனர் லகஷ்மி குமராதிலக்க தெரிவித்துள்ளார்.

Read More

டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் விசேட செயற்றிட்டம் – சுகாதார அமைச்சு

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் 12 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரம் அடைந்துள்ளதனால் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் விசேட செயற்றிட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு அமுல்படுத்தவுள்ளது. இதனடிப்படையில் பாடசாலை விடுமுறை முடிவடைவதற்கு முன்னர் பாடசாலைகளை சுத்தம் செய்யும் விசேட செயற்றிட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என்று சுகாதாரதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இந்தத் திட்டம் சுகாதாரதுறை அதிகாரிகள், கல்வியமைச்சு, பொலிஸார், பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக…

Read More