கென்யாவிற்கு கடத்தப்பட்ட 3 இந்திய சிறுமிகள் உட்பட 10 பேர் மீட்பு

(UTV|KENYA)-தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தததாக தகவல் வந்தது. தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தகவல் தெரிவித்துள்ளார். ‘கென்யாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை மீட்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டது. கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் 3 இந்திய சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். குழந்தை கடத்தல் குறித்து பஞ்சாப் மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது….

Read More

மல்லாகத்தில் கடத்தப்பட்ட மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு

(UDHAYAM, COLOMBO) – யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி வரணிப் பகுதியில் வேனிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மாணவி மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவி, பாடசாலைக்கு நடந்த செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். ஹயஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால் மாணவி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது….

Read More

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 13 கிலோ தங்கம் தமிழகத்தில் சிக்கியது

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 13.76 கிலோ தங்கம் தமிழகத்தின் இரண்டு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன. விசேட புலனாய்வுத் தகவல் அடிப்படையில், குறித்த தங்கம், தமிழக சுங்க புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கும், மதுரைக்கும் இடையே பயணித்த பேருந்து ஒன்றில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 7.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவரிடம் இருந்தே குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாம்பன் – குத்துகல் கடற்கரைப் பகுதியில் வைத்து 6.4 கிலோகிராம்…

Read More