தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் தமிழக கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 20ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகித்தில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துக்கு நியாயம் கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டதுடன், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரது இறுதி கிரிகை ஒருவாரத்துக்குப் பின்னர் நேற்று நடைபெற்றது….

Read More