கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று
(UTV|COLOMBO)-கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று நடைப்பெறவுள்ளது. மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் குறித்த விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதுகுறித்து கலந்துரையாடுவதற்கே குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டம் தொடர்பில், அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் நீல் தெரிவித்தார்….