பளை பிரதேச செயலக 2வது நிர்வாகக் கட்டிடத்தை கிளி அரச அதிபர் திறந்து வைத்தார்
(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் இரண்டாவது நிர்வாகக்கட்டிடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்துள்ளார். மக்களுக்கான சேவையினை தடையின்றி வழங்கும் முகமாக பிரதேச செயலகங்களின் வளங்களை விருத்தி செய்யும் முகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பளை பிரதேச செயலகத்தில் மேற்படி அமைச்சின் நிதி உதவியுடன்…