இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது
(UDHAYAM, COLOMBO) – அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் அனுசரணையில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் நேற்று இப்தார் நிகழ்வு நடைபெற்றது. பிரதம அத்தியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் , இப்தார் நிகழ்வுகள் இன ஐக்கியத்துக்கு விதை தூவுகின்ற ஒன்றாகவே நான் காண்கின்றேன். இந்த இனவாத நிகழ்வுகள் இடம்பெறாது, எதிர் காலத்தில் இவ்வாறான அசௌகரியங்கள், அச்சுறுத்தல்கள்,…