சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டமூலம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இழுவைப்படகுகளுக்கான தடை உள்ளிட்ட விடயங்கள் அடங்கியதாக இந்த சட்டமூலம் அமையப்பெற்றுள்ளதாக, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் நூறு பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்குவை பரவலை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தாவர உண்ணி நுளப்புகளை முதல் முதலில் கிராம பகுதிக்கு வெளியிடப்பட்டமையானது, டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கப்படும் புகை போன்ற காரணங்களால் நகர் புறங்களில் அந்த தாவர உண்ணி நுளம்புகள் அழியும் அவதானத்தால் என மருத்துவ ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நுளம்புகள் ஊடாக எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த நிலையத்தின் இயக்குனர் லகஷ்மி குமராதிலக்க தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவின் திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து ஆராய அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன. இந்த நிலையில், இலங்கையில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய் குறித்து ஆராய அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனூடாக, டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட திட்டங்களை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது….

Read More

இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ

(UDHAYAM, COLOMBO) – இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை  அமுலாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிற நிலையிலேயே மகிந்த இதனை தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களுக்கு அமைய காவற்துறையினருக்கு அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. இனவாத செயல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லாமை காரணமாகவே, தமது அணியினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எனவும் மகிந்த…

Read More

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பின் தலையீட்டை எதிர்ப்பார்த்துள்ள சோமாலியா

(UDHAYAM, COLOMBO) – சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் ஈடுபடுவது போன்றே சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தியதாக இலங்கை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட கப்பல், சோமாலிய பொசாசோ துறைமுகத்திற்கு சென்ற பின்னர் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Read More

கிண்ணியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO)  – கிண்ணியா மற்றும் திருகோணமலையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவானவர்கள் தங்கிச் சிகிச்சைப் பெறுவதால், குறித்த வைத்தியசாலைகளில் தற்காலிக சிகிச்சைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கிண்ணியா பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அங்கு 3 வாரங்களில் 13 பேர் வரையில் டெங்கினால் மரணித்துள்ளனர். டெங்கு அச்சத்தில் 66 பாடசாலைகள் வரையில் அங்கு மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிண்ணியாவில்…

Read More