கணிதப்பாட பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை
(UTV|COLOMBO)-இம்முறை சாதாரண தர பரீட்சையின் கணிதப்பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கான விடையளிக்கும் காலப்பகுதி தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக முன்னாள் கல்வி அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். இந்த பிரச்சினைக்கான தீர்வை கல்வி அமைச்சர் அறிவிக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்திருந்தார். மேலும், இம்முறை கணிதப்பாட பரீட்சைக்கு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியினுள் , ஆசிரியர் ஒருவருக்கேனும் விடையளிக்க முடியாது…