காங்கோவை மீண்டும் தாக்கிய எபோலா வைரஸ்
(UTV|CONGO)-விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சுகளும் பாதிப்புக்கு ஆளாகினர். இப்போது மறுபடியும், காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மபண்டாகா நகரில் இந்த நோய் பரவி வருகிறது….