காவற்துறை அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்

(UDHAYAM, COLOMBO) – காவல்துறை தலைமை பரிசோதகர்கள் 10 பேர் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் 14 பேர், சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை காரியாலயம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில், கொகரெல்ல காவல் நிலையத்தின் 15 அதிகாரிகளும் காணப்படுவதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read More

காவற்துறை சீருடையுடன் இருவர் கைது.

(UDHAYAM, COLOMBO) – காவற்துறை சீருடை, சிறைச்சாலை அதிகாரிகள் பயன்படுத்தும் இரண்டு தலைக்கவசங்கள் மற்றும் கைவிலங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா – வெலிவிட்ட பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள இவர்களிடமிருந்து போலி வாகன இலக்கத்தகடு, காப்புறுதி பத்திரம் மற்றும் வாகன அனுமதி பத்திரமும் காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முச்சக்கர வண்டியொன்றை பரிசோதனை செய்து போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அங்கொட…

Read More

பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – தங்க நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி இந்த மாதம் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்

(UDHAYAM, COLOMBO) – கப்பம் கோரிய நபரொருவரை கைது செய்ய சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது காவற்துறை பாதுகாப்பின் கீழ் கேகாலை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கப்பம் கோரியவரை…

Read More

எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த காலப் பகுதியில் இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை காரணமாக அவர் முன்னிலையாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவற்துறை அலுவலருக்கு பதவி உயர்வு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த காவற்துறை அலுவலர் சமிந்த அபேவிக்ரம காவற்துறை சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் காவற்துறை ஆய்வாளர் நியோமால் ரங்கஜீவ தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலுமொரு காவற்துறை அதிகாரியொருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் , சம்பவத்தில்…

Read More

காவற்துறை ஒன்றுக்கு முன்னாள் தீவிரநிலை: 8 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் நேற்று இரவு பிங்கிரிய காவற்துறைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவற்துறை நோக்கி கற்களை எறிந்தும், காவற்துறைக்கு முன்னாள் உள்ள பாதையில் டயர்களை இட்டு எரித்தும், அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பிங்கிரிய பிரசன்னகம பிரதேசத்தில் வேன் ஒன்றும், உந்துருளியொன்றும் மோதிய இந்த விபத்தில் உந்துருளியில்…

Read More

சிறை அருகே சசிகலா தரப்பு வாகனங்கள் மீது தாக்குதல்!… காவற்துறை தடியடி!

(UDHAYAM, CHENNAI) – பெங்களூரில் சசிகலா சென்ற சிற்றூர்ந்துடன் சென்ற சிற்றூர்ந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தாக்குதில் சிற்றூந்துகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைவதற்காக சென்ற போது இந்தத் தாக்குதல் நடந்தது. சசிகலாவிற்கு உடைகள் கொண்டு வந்த சிற்றூந்து மீது திடீரென்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. சசிகலாவுடன் வந்த தமிழக பதிவெண் கொண்ட மேலும் 4 சிற்றூந்துகள் மீதும் ஏறிய சிலர்…

Read More