கிராண்ட்பாஸ் கட்டிட விபத்து; நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரண்
(UTV|COLOMBO)-கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் நேற்று கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 07 பேர் உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்து பொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய…