கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

(UDHAYAM, COLOMBO) – கண்டி பொது மருத்துவமனையின் வார்டு இலக்கம் 23ல் சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபரொருவர் குறித்த மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் வார்டில் இருந்து மருத்துவ பரிசோதனையொன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More