குப்பை அகற்றும் பணிகளை விரிவுபடுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-குப்பை அகற்றும் பணிகளை அடுத்த வருடம் மேலும் ஒழுங்குபடுத்தவுள்ளதாக தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.டீ.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதற்காக 80 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. உட்பாதைகளில் குப்பை குழங்களை ஒழுங்கான முறையில் அகற்றுவதற்காக உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வாகனங்களையும் உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாளாந்ததம் 50 மெற்றிக் தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்யக்கூடிய மத்திய நிலையங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த வருடம் இந்தப் பணி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று…

Read More

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுகேகொட, கல்கிசை, கம்பஹா, களனி, பாணந்துறை முதலான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் பொலிஸாரும் இராணுவத்தினரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வார்கள்.

Read More

குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசியல் தேவைக்காக கொழும்பு குப்பை பிரச்சனைக்கு எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வது வருத்ததிற்குரியது என்பதுடன், குப்பை பிரச்சினைக்கு அனைத்து மக்களும் இணைந்து முடிவு எடுக்காவிடின் அனைத்து மக்களும் குப்பைகளை வீடுகளிலேயே வைத்து கொள்ள வேண்டிய நிலை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More