டெங்கு சிகிச்கைகள் முறையாக இடம்பெறுவதனால் குறைவடைந்துள்ள உயிரிழப்பு
(UDHAYAM, COLOMBO) – டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் டெங்கு நுளம்புகளின் அடர்த்தி, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை என்பனவற்றை எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் [ஒரு மாதம்] 50 சதவீதத்தால் குறைப்பதற்கான திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் தயாரித்துள்ளார்கள். இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு மருத்துவ நிபுணர்கள் உலக வங்கியின் பரிந்துரைக்கு…