தேர்தல் தொடர்பான ஆய்வுகளில் வெளிநாட்டு குழுவினர்
(UTV|COLOMBO)-இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு குழுவினர் இன்று பல்வேறு மாவட்டங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும் நடைமுறைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது. விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து 10 உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் செய்ததாக தேர்தல் திணைக்களத்தின் மேலதிக…