அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

(UDHAYAM, COLOMBO) – அஞ்சல் சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஆலிம் தெரிவித்துள்ளார். அத்துடன், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்….

Read More

தாய்வானின் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – தாய்வானின் பிரபல நிறுவனங்களை பிரிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. தாய்வான் நியூஸ் இணையதளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளம் முதலான நாடுகளுக்கும் இந்தக் குழு விஜயம் செய்கிறது. ஆடைத்துறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துபவர்கள் இந்த வர்த்தக குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இம்மாதம் 4 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்துள்ள தாய்வான் வர்த்தக குழு, எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இந்த மூன்று நாடுகளுக்கும்…

Read More